இஸ்ரேல் பணயக்கைதிகள் விடுதலையை வரவேற்றுள்ள பிரதமர் மோடி, அதிபர் டிரம்பின் முயற்சியை ஆதரிப்பதாகவும் கூறியுள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதன் எதிரொலியாக, உயிருடன் இருந்த பணயக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் வந்த அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இது புதிய தொடக்கம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறைபிடிக்கப்பட்ட அனைத்து பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட்டதை வரவேற்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அவர்களின் விடுதலை அவர்களது குடும்பங்களின் தைரியத்திற்கும், அதிபர் டிரம்பின் அசைக்க முடியாத அமைதி முயற்சிகளுக்கும், பிரதமர் நெதன்யாகுவின் உறுதிக்கும் ஆசியாக நிற்கிறது என்றும், பிராந்தியத்தில் அமைதியைக் கொண்டு வருவதற்கான அதிபர் டிரம்பின் உண்மையான முயற்சிகளை ஆதரிப்பதாகவும், பிரதமர் மோடி கூறியுள்ளார்.