21-ம் நூற்றாண்டு இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளுக்கானது என்றும், ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கும் என்றும் பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இன்று தொடங்கிய ஆசியான்-இந்தியா உச்சி மநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் இருந்து காணொளி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார்.
மலேசியப் பிரதமர் அன்வர் பின் இப்ராஹிம் தலைமையில் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மாநாட்டில் காணொளி மூலம் உரையாற்றிய மோடி, ஆசியான் நட்பு நாடுகளில் எந்தவொரு பேரிடர் நிகழ்ந்தாலும், இந்தியா அந்த நாடுகளுடன் துணை நின்றுள்ளதாகக் கூறினார். ஆசியான் நாடுகளுடனான இந்தியாவின் ஒருங்கிணைந்த நல்லுறவுகள் தொடர்ந்து மேம்படும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.

















