தீபாவளிப் பண்டிகையின்போது, பட்டாசுகளால் இதுவறை ஏற்பட்ட விபத்துகள் குறைந்திருப்பதாகவும், உயிருக்கு ஆபத்து என்ற நிலையில் யாரும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் தீக்காயப் பிரிவில் சிகிச்சை பெறுவோரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அங்கு தீக்காயங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றியும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகம் முழுவதும் இன்று நண்பகல்வரை, 41 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றிருப்பதாகவும், தீக்காயங்களுக்காக உள்நோயாளிகளாக 48 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
பட்டாசுகளை வெடிக்கும்போது பொதுமக்கள் பாதுகாப்புடன், அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, அனுமதிக்கப்பட்ட நேரத்தில் வெடிக்க வேண்டும் என்றும் மா.சுப்பிரமணியன் கூறினார்.
 
			















