தெருக்களின் சாதிப்பெயர்களை நீக்குவது குறித்து, 5 முறை ஆட்சியில் இருந்த போது வராத ஞானோதயம் தற்போது மட்டும் வந்தது ஏன் என திமுகவுக்கு பிஜேபி துணைத் தலைவர் கரு.நாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பிஜேபியின் அமைப்புசாரா மக்கள் சேவை பிரிவு சார்பில் கரு.நாகராஜன் பரிசு பொருட்களை வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு குழப்பங்கள் ஏற்படும் என்பதால், தெருக்களுக்கு வைக்கப்பட்டுள்ள சாதி பெயர்களை நீக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
