மத்திய அரசு தமிழகத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் திமுகவுடன் கூட்டணி அமைத்ததாக மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரை அடுத்த புதுக்கரியப்பட்டி கிராமத்தில் மக்கள் நீதி மையம் இளைஞர் அணி மாநில செயலாளர், கவிஞர் சினேகனின் தந்தையார் உருவப்பட திறப்பு விழா நடைபெற்றது. இதில் கமலஹாசன் கலந்துகொண்டு திருவுருவ படத்தை திறந்து வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர் மக்கள் நீதி மையத்தின் கொள்கை விளக்கம் செயல் வடிவமாக மாறி இருப்பதாக கூறினார். பதவிக்காக துணிவை இழக்கும் மரியாதை அற்ற மக்கள் அல்ல நாங்கள் என்றும் அவர் தெரிவித்தார். ஒன்றை நிராகரிப்பது அல்ல பகுத்தறிவு, ஒன்றை புரிந்து கொண்டு தேவையான அளவு இழைபடுவதும் பங்கேற்பதும் தான் பகுத்தறிவு என்றும் கமலஹாசன் திமுக கூட்டணி குறித்து விளக்கம் அளித்தார்.


















