தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில், கோடிக்கணக்கான ரூபாயை வாரி இறைத்தாலும், மக்கள் திமுக அரசை வீட்டிற்கு அனுப்பத் தயாராகி விட்டதாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை திரு.வி.க நகர் தொகுதி அதிமுக நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் வீதம் கமிஷன் அடித்தும், பல்வேறு துறைகளில் ஊழல் செய்தும் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை திமுக-வினர் தேர்தலில் வாரி இறைக்க உள்ளதாகத் தெரிவித்தார். திமுக-வினர் என்னதான் பணத்தை வாரி இறைத்தாலும் அவர்களால் வெற்றிபெற முடியாது. ஏனென்றால், திமுக அரசை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டதாக அவர் தெரிவித்தார்.