மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இந்த தொடரில் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறும் 13-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய அணி தனது முதல் இரு ஆட்டங்களில் இலங்கையையும், பாகிஸ்தானையும் அடுத்தடுத்து புரட்டியெடுத்தது. முந்தைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் போராடி வீழ்ந்தது. இன்றைய ஆட்டம் இந்திய அணிக்கு முக்கியமானதாகும். இதில் தோல்வியை சந்தித்தால் மேலும் நெருக்கடி அதிகரிக்கும். இவ்விரு அணிகளும் இதுவரை 59 ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 48 ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவும், 11 ஆட்டங்களில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன.