தனது அடுத்த சிம்பொனி இசையை எழுதுவது குறித்த அறிவிப்பை இசையமைப்பாளர் இளையராஜா வெளியிட்டுள்ளார். அத்துடன், சிம்பொனிக் டான்சர்ஸ் என்ற இசைக்கோர்வையை புதிய படைப்பாக எழுத உள்ளதாகவம் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியா சினிமாவிலும் முக்கியமான இசை ஆளுமையாக திகழும் இளையராஜா, ஆயிரக்கணக்கான படங்களுக்கு இசையமைத்துள்ளார். தனது 82-வது வயதிலும்கூட, படங்களுக்கு இசையமைத்தும், லண்டனில் சிம்பொனி இசை அரங்கேற்றமும் செய்தார். இதற்காகவும், அவரது 50 ஆண்டுகால திரைப்பயணத்தை கௌரவி க்கும் வகையிலும் தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இந்நிலையில், இளையராஜா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், அடுத்த சிம்பொனி எழுதுவதற்கு, அம்மாவின் நினைவு தினத்தை முடித்து விட்டு துவங்கலாம் என இருக்கிறேன். இத்துடன் புதிய படைப்பாக சிம்பொனிக் டான்சர்ஸ் என்ற இசைக்கோர்வையை எழுதுவதாக இருக்கிறேன். இதை உங்களுக்கு தீபாவளி நற்செய்தியாக சொல்வதாகவும் கூறியுள்ளார்.

















