வெற்றியின் மூலம் பதிலடி கொடுத்த குகேஷ்

சென்ற ஆட்டத்தில் தனது ராஜாவை தூக்கி எறிந்து, வெற்றியை கொண்டாடிய அமெரிக்க வீரர் ஹிகாருவிற்கு, இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ் தனது வெற்றியின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த போட்டியில் குகேஷை வீழ்த்திய ஹிகாரு, குகேஷின் ராஜாவை தூக்கி எரிந்து தனது வெற்றியைக் கொண்டாடினார். இது சமூக வலைதளங்களில் விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில், அமெரிக்காவின் செயிண்ட் லூயிஸ் நகரில் நடைபெற்று வரும், கிளட்ச் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், அமெரிக்க கிராண்ட்மாஸ்டர் ஹிகாரு நகாமுராவுக்கும், இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷுக்கும் இடையே போட்டி நடைபெற்றது. இதில் கருப்பு காய்களுடன் களமிறங்கிய குகேஷ், இரண்டாவது சுற்றிலேயே திறனுடன் காய்களை நகர்த்தி ஹிகாருவை வீழ்த்தினார்.

வெற்றி பெற்ற பிறகு, ஹிகாருவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அநாகரிகமாக நடந்துகொள்ளாமல், குகேஷ் சதுரங்க காய்களை அடுக்க ஆரம்பித்துவிட்டார். அப்போது அங்கிருந்த ரசிகர்கள் கோஷங்களை எழுப்பி, குகேஷுக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Exit mobile version