தங்கம் விலை உயர்வால் காற்று வாங்கும் நகைக்கடைகள்

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 400 ரூபாய் உயர்ந்து, சவரன் 97 ஆயிரத்து 600 ரூபாய் என புதிய உச்சம் பெற்றுள்ளது.

பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கம் உள்ள¤ட்ட பல்வேறு சர்வதேச காரணிகளால்,
கடந்த சில தினங்களாக, தங்கத்தின் விலை, ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், தங்கம் வாங்குவோர் அதிகம் என்பதால், ஆபணத் தங்கத்தின் விலை வழக்கத்தைவிட உயர்ந்துள்ளது.

அதேசமயம், வெள்ளியின் விலை கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 203 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே, தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நகைக் கடைகள் வாடிக்கையாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.

Exit mobile version