ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ஆயிரத்து 120 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் 96 ஆயிரம் ரூபாயை நெருங்கி இருக்கிறது.
பங்குச் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக, தங்கத்தின் விலையில், ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிறது. ஆனால், கடந்த 4 நாட்களில் மட்டும், சவரனுக்கு 4 ஆயிரம் ரூபாய் உயர்ந்திருக்கிறது. இதனால், நகை வாங்கும் எண்ணத்தில் இருந்தவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
சென்னையில் ஒரு கிராம் தங்கம், 11 ஆயிரத்து 980 ரூபாயாகவும், ஒரு சவரன் 95 ஆயிரத்து 840 ரூபாயாகவும் உள்ளது. இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 9 ரூபாய் அதிகரித்துள்ளது. வெள்ளி ஒரு கிராம் 192 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, ஒரு லட்சத்து 92 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
