ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு, மேலும் 640 ரூபாய் அதிகரித்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை, பங்குச்சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, தினசரி நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களாக, தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இன்றைய தினம் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்திருக்கிறது.
சென்னையில் ஒரு கிராம் தங்கம், 12 ஆயிரத்து 680 ரூபாயாகவும், ஒரு சவரன் ஒரு லட்சத்து ஆயிரத்து 440 ரூபாயாகவும் உள்ளது. இதேபோல், வெள்ளி கிராமுக்கு 6 ரூபாய் அதிகரித்துள்ளது. வெள்ளி ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

















