ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து ஒரு சவரன் 91 ஆயிரத்து 80 ரூபாய் என, புதிய உச்சத்தை தொட்டுள்ளது. பெற்றிருக்கிறது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை தினசரி காலை, மாலை என, 2 முறை நிர்ணயிக்கப்படுகிறது.
இன்று காலை சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன், 90 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த நிலையில் மாலையில் தங்கம் மேலும் 680 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 91 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது.