பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கான தங்க கவசத்தை வங்கி லாக்கரில் இருந்து எடுத்த அதிமுக நிர்வாகிகள், தேவர் நினைவிட நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.
முத்துராமலிங்க தேவரின் 118-வது ஜெயந்தி விழா மற்றும் 63-வது குருபூஜை விழா, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள நினைவிடத்தில், வரும் 30 தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அதிமுக சார்பில் வழங்கப்பட்ட பதிமூன்றரை கிலோ எடையிலான தேவர் தங்க கவசத்தை, அக்கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில், முன்னாள் அமைச்சர்கள் மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கி லாக்கரில் இருந்து எடுத்தனர். பின்னர் அதனை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் சென்று, பசும்பொன் தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் அவர்கள் ஒப்படைத்தனர¢.

















