சேலம் மாவட்டம் எடப்பாடியில், தந்தை திட்டியதால் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திக்கேயன். இவரது மகள் இலக்கியா, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், இலக்கியா வீட்டில் அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதை, தந்தை கார்த்திக்கேயன் கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இலக்கியா, தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த எடப்பாடி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, இலக்கியாவின் உடலைக்கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.