4-வது நாளாக நீடிக்கும் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தால் சமையல் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
2016-ம் ஆண்டுக்கு பிறகு பதிவு செய்யப்பட்ட தகுதியான அனைத்து எரிவாயு டேங்கர் லாரிகளுக்கும் வேலை வழங்கக்கோரி தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கடந்த 9-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எண்ணெய் நிறுவன அதிகாரிகள் சங்க நிர்வாகிகளுடன் நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்ததால் வேலை நிறுத்தம் தொடர்கிறது. இன்று 4-வது நாளாக நீடிக்கும் வேலை நிறுத்தத்தால் சமையல் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.இதனிடையே ஆயில் நிறுவன அதிகாரிகள் சங்க நிர்வாகிகளுடன் இன்றும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர், ஆனால் இன்னும் எந்த முடிவும் இதுவரை எட்டப்படவில்லை.