GAS சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடா? விளக்கமளித்த இந்தியன் ஆயில்

டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக, தென் மாநிலங்களில் எரிவாயு சிலிண்டர்களுக்கு, தட்டுப்பாடு ஏற்படவில்லை என, எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக செயல்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், தெலங்கானா, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரத்து 514 எல்பிஜி டேங்கர் லாரிகளின் உரிமையாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த சூழலில், புதிய வாடகை ஒப்பந்தத்தில், 3 ஆயிரத்து 879 லாரிகள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என, கட்டுப்பாடுகளை எண்ணெய் நிறுவனங்கள் விதித்துள்ளன. இதை எதிர்த்து எல்பிஜி டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.

எனினும், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சிலிண்டர்கள் சீராக வினியோகம் செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், போதுமான சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளதாகவும், இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Exit mobile version