மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் சந்தித்து நலம் விசாரித்தார்.
காலையில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்தனர். அதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியும் பிற்பகல் மருத்துவமனைக்கு சென்று ராமதாஸின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். அப்போது, 12 ஆண்டுகளுக்கு முன்பு இருதய அறுவைச் சிகிச்சை செய்துகொண்டதாகவும், இப்போது இதயம் எப்படி வேலை செய்கிறது என்பதை ஆய்வு செய்வதற்காகவே, மருத்துவப் பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் ராமதாஸ், அவரிடம் தெரிவித்தார். முன்னதாக,GK மணியும் அன்புமணியும் மருத்துவமனைக்கு ராமதாஸை பார்க்க வந்திருந்தனர், GK மணியை மட்டும் பார்க்க விருப்பம் தெரிவித்த ராமதாஸ், அன்புமணியை பார்க்க விரும்ப வில்லையாம். இதனால் மருத்துவமனைக்கு வந்த அன்புமணி ஏமாற்றத்துடன் திரும்பினார்.