தஞ்சாவூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் கனமழையால், பல நூறு ஏக்கர் நெல் பயர்கள் தண்ணீரில் மூழ்கி இருக்கிறது. அதேபோல், அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் இருப்பதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார். காட்டூர் பகுதியில் உள்ள, அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்ற அவர், அப்பகுதி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படாததற்கு, அரசின் அலட்சிய போக்கே காரணம் என குற்றஞ்சாட்டினார்.
 
			
















