கரூர் சம்பவம் திட்டமிட்டு நடந்ததாக சொல்கிறார்கள் – EPS

கரூர் சம்பவம் வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்தப்பட்டதாக பொதுமக்கள் பேசிக்கொள்கிறார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கரூர் சம்பவத்தை தொடர்ந்து நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளால், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அவர் மேற்கொள்ள இருந்த பிரசாரம் தள்ளி போனது.

இந்நிலையில் திருச்செங்கோட்டில் காவல்துறையின் அனுமதியை பெற்று மைதானம் ஒன்றில் எடப்பாடி பழனிசாமி மக்களிடையே ஆதரவு திரட்டினார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்து 52 மாதங்கள் ஆகியும் திருச்செங்கோடு தொகுதிக்கென எந்த ஒரு பெரிய திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என குற்றம் சாட்டினார்.

திமுக அரசு மகளிர் உரிமைத்தொகை கொடுப்பதற்கு அதிமுக தான் காரணம் எனக்கூறிய அவர், தற்போது, வாக்குகளை பெறுவதற்காக 30 லட்சம் பேருக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என ஸ்டாலின் பேசி வருவதாகவும் தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில் மொத்தம் 17 மருத்துவக்கல்லூரிகள் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது திமுக ஆட்சியில் ஒரு மருத்துவக்கல்லூரி கூட கொண்டுவரப்படவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார். அதிமுக ஆட்சி அமைந்த தும் தமிழகத்தில் கஞ்சா விற்பனை முழுவதுமாக தடை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version