முடிவுக்கு வந்தது வேதனை – காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்து

அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த காசா அமைதி ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக எகிப்தில் கையெழுத்தானது.
இஸ்ரேல்-காசா இடையேயான போர் அமெரிக்க அதிபர் டிரம்ப், முன் மொழிந்த 20 அம்சங்கள் கொண்ட ஒப்பந்தத்தால் முடிவுக்கு வந்துள்ளது. இருதரப்பிலும் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்து உள்ளனர்.

எகிப்தின் ஷர்ம் எல் ஷேக் நகரில் டிரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல்சிசி தலைமையில் காசா அமைதி மாநாடு நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஐநா பொதுச் செயலாளர் குட்டரெஸ், இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கிர்த்தி வர்தன் சிங் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இதனைத்தொடந்து, டிரம்ப் அறிவித்த காசா அமைதி ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக எகிப்தில் கையெழுத்தானது. இந்த ஆவணத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.
முன்னதாக இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பேசிய டிரம்ப், இஸ்ரேல், பாலஸ்தீன மக்களின் வேதனை முடிவுக்கு வந்துள்ளது. அமைதியை விரும்பிய மக்களுக்கு ஒப்பந்தம் உறுதுணையாக இருக்கும் என்று அவர் கூறினார்.

Exit mobile version