தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுவதும் பட்டாசுகள் வெடித்து, இரவுநேர தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் களைகட்டியது.
புத்தாடை, வழிபாடு, இனிப்பு, விருந்து என பகல் பொழுது தீபாவளி கொண்டாட்டம் மென்மையாக நகர்ந்த நிலையில், இரவில் பட்டாசு என அதிரடி உற்சாகத்திற்கு மாறியது. வீதிகள் எங்கும், வீடுகள் முன்பு குடும்பம், குடும்பமாக திரண்டிருந்த சிறியவர் முதல் பெரியவர்கள் வரை, வண்ண, வண்ண பட்டாசுகளை வெடித்து, வானில் வர்ணஜாலங்களை வெளிப்படுத்தினர். வீட்டு காம்பௌண்ட்கள், மொட்டை மாடி என தங்களுக்கு கிடைத்த இடங்களில் எல்லாம் பட்டாசு வெடித்து ஆர்ப்பரித்தனர்.
இதேபோல, நாடெங்கிலும் இரவு நேர தீபாவளி கொண்டாட்டம் பட்டாசுகளுடன் அதிரடியாக களைகட்டியது.

















