26 லட்சம் தீபங்கள் ஏற்றி கின்னஸ் சாதனைக்கு தயாரான அயோத்தி

தீபத்திருவிழாவிற்காக அயோத்தியில் இன்று இரவு 26 லட்சம் தீபம் ஏற்றி வரலாறு படைக்கப்படுகிறது. இதற்கான பிரமாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

தீபாவளி பண்டிகையை ஒட்டி அயோத்தியின் சரயு நதிக்கரையில் லட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றி, கின்னஸ் உலக சாதனை படைக்கும் விழாவுக்கு மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான இறுதி கட்டப்பணிகள் நடக்கின்றன.

இன்றிரவு நடக்கும் விழாவில் 26 லட்சத்திற்கும் மேற்பட்ட தீபங்களை ஏற்ற உள்ளனர். இந்த முயற்சியில், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர்.

கடந்த 2024ம் ஆண்டு தீபாவளிக்கு 25 லட்சத்திற்கும் அதிகமான தீபங்கள் ஏற்றப்பட்டு, இரண்டு கின்னஸ் உலக சாதனைகள் படைக்கப்பட்டன. அதை முறியடித்து புதிய சாதனை படைக்கும் நோக்கத்துடன் இந்தாண்டு தீபத்திருவிழா ஏற்பாடுகளை உத்தரபிரதேச மாநில அரசு செய்து வருகிறது.

Exit mobile version