மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வீரர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவுக்கு வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. ஆமதாபாத்தில் நடந்த முதலாவது டெஸ்டில், இந்தியா 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆட்டத்தில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல் 38 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனைத்தொடர்ந்து ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் இணைந்து மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களின் பந்துவீச்சை பதம் பார்த்து வருகின்றனர். இதில் நிதானமாக விளையாடிய ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தினார்.

















