குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், 2 நாள் அரசு பயணமாக இன்று செஷல்ஸ் நாட்டிற்கு புறப்பட்டு சென்றார்.
ஜகதீப் தன்கர் பதவி விலகியதை அடுத்து, மகராஷ்டிரா ஆளுனராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன், புதிய குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் துணைக் குடியரசுத் தலைவரான பிறகு, சி.பி. ராதாகிருஷ்ணன் தனது முதல் வெளிநாட்டு பயணமாக செஷல்ஸ் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
செஷல்ஸ் நாட்டின் அதிபராக பேட்ரிக் ஹெர்மெனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரது பதவியேற்பு விழாவில் இந்திய அரசு, சார்பாக குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொள்கிறார்.
மேலும், இந்த பயணத்தின் போது செசல்ஸ் மற்றும் இந்தியா இடையே, நல்லுறவை மேம்படுத்துவது குறித்தும், சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்துவார் என, மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
			















