இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஆடை ஏற்றுமதி விரைவில் இரு மடங்காக அதிகரிக்கும் என்று குடியரசு துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
குடியரசு துணை தலைவராக பெறுப்பேற்ற பின் நேற்று கோவை வந்த சி.பி. ராதாகிருஷ்ணன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இன்று திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தந்த அவர் திருப்பூர் குமரன் நினைவகத்தில் உள்ள குமரன் சிலைக்கும், மாநகராட்சி சந்திப்பு பகுதியில் உள்ள காந்தி சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து தொழில் துறை மற்றும் அரசியல் கட்சியினர் நடத்திய பாராட்டு விழாவில் சிபி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அரசியலில் மாற்று கட்சி தலைவர்களை விமர்சனம் செய்கின்றோம். ஆனால் அவர்களிடமிருந்து நல்லதை எடுத்துக் கொள்ள வேண்டும். என்று அறிவுறுத்தினார்.தமிழகத்தில் பிரம்மாண்ட வெற்றியையும், தோல்வியையும் சந்தித்த தலைவர் கருணாநிதி என்றும் இருப்பினும் அவர் தன்னுடைய உழைப்பை என்றும் நிறுத்தியது இல்லை என்று புகழாரம் சூட்டினார்.
















