புதுமணத் தம்பதிகள் தீபாவளி பண்டிகையை, தங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
திருமணம் முடித்த பிறகு அந்த ஆண்டில் வரும் தீபாவளியை, புதுமணத் தம்பதியர், தலை தீபாவளியாக கொண்டாடுவது இந்துக்களின் மரபு. இந்த நாளில் பெண் வீட்டில், மாப்பிள்ளைக்கு விருந்து அளிக்கப்படும். தலை தீபாவளி பரிசாக, மாமனார் வீட்டில் இருந்து புத்தாடை, புது நகைகள், இனிப்பு, பலகாரங்கள், பரிசுப் பொருட்கள் வழங்கி மகிழ்விப்பார்கள். அந்த வகையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில், புதுமணத் தம்பதியினர் தங்களது தலை தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
















