இந்திய பங்கு சந்தைகள் தொடர்ந்து 4-வது நாளாக திங்கள் கிழமையும் உச்சமடைந்து காணப்பட்டன.
மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 411.18 புள்ளிகள் உயர்ந்து 84 ஆயிரத்து 363.37 புள்ளிகளாக இருந்தது. அது 704.37 புள்ளிகள் வரை உச்சமடைந்து 84 ஆயிரத்து 656.56 புள்ளிகளாகவும் இருந்தது.
இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 133.30 புள்ளிகள் உயர்ந்து 25 ஆயிரத்து 843.15 புள்ளிகளாக இருந்தது. உலகளாவிய சந்தைகளில் காணப்பட்ட நேர்மறையான போக்கு இந்திய பங்கு சந்தைகளில் எதிரொலித்துள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் 3 புள்ளி 52 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது. இதேபோன்று பஜாஜ் பின்செர்வ், ஆக்சிஸ் வங்கி, இந்திய பாரத வங்கி, டாடா கன்சல்டன்சி, டைட்டன் மற்றும் பாரதி ஏர்டெல் ஆகியவையும் லாபத்துடன் காணப்பட்டன. ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பங்கு சந்தைகள் லாபத்துடன் காணப்பட்டன.

















