கரூர் விவகாரத்தை மடைமாற்றம் செய்வதற்காகவே, கச்சத்தீவு விவகாரத்தை முதலமைச்சர் கையில் எடுத்திருப்பதாக பாஜக தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பிஜேபி மாநில மையக்குழு கூட்டம் சென்னையில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் கமலாலயத்தில் நடைபெற்றது. இதில் பிஜேபி தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா, இணை பொறுப்பாளர் முரளிதர்ராவ், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், வானிதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்கள், கரூர் தவெக கூட்ட நெரிசல் சம்பவத்தில் அரசுக்கு எதிராக பொதுமக்களின் கருத்துகள் அதிகரித்திருப்பதால், அதனை மடைமாற்றம் செய்ய திமுக முயற்சிப்பதாக, குற்றம்சாட்டினர்.
