முன்னாள் கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் தலைவருமான முகம்மது அசாருதீன், தெலங்கானா மாநிலத்தின் அமைச்சராக பதவியேற்றார்.
ஐதராபாத்தில் உள்ள ஆளுனர் நடைபெற்ற விழாவில், ஆளுனர் ஜிஷ்ணு தேவ் வர்மா, அசாருதீனுக்கு பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்புப் பிரமாணம் செய்து வைத்தார். தற்போது, அசாருதீன் தெலங்கானா மேலவை உறுப்பினராக உள்ளார். அவரை அமைச்சரவையில் சேர்க்க அறிவிப்பு வெளியானபோது, பிஜேபி சார்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.
ஜூபிலி ஹில்ஸ் சட்டமன்ற தொகுதியில், இடைத்தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கிறது. இந்த சமயத்தில் சிறுபான்மை மக்களை திருப்தி படுத்த, அசாரூதீனை அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி சேர்த்திருப்பதாகவும் பிஜேபி குற்றம் சாட்டி இருக்கிறது.
 
			















