தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை கூடியது. மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் முக்கிய தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, அவை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. காலை பேரவை கூடியதும், முன்னாள் உறுப்பினர்கள் புரட்சிமணி, குணசேகரன், கோவிந்தசாமி, அமர்நாத், அறிவழகன், இராமலிங்கம், கலீலுர் ரகுமான், சின்னசாமி ஆகியோரது மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
இதேபோல், கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததற்கும், கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், ஜார்கன்ட் முன்னாள் முதல்வர் சிபுசோரன், முதுபெரும் அரசியல் தலைவரும், நாகலாந்து ஆளுனருமான இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, ஐஏஎஸ் அதிகாரி பீலாவெங்கடேசன், வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி ஆகியோரது மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, பேரவை நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டது.
நாளை காலை 9-30 மணிக்கு அவை கூடும். அப்போது, கூடுதல் செலவினங்களுக்கான அறிக்கை பேரவையில் வைக்கப்பட்டு, அதன் மீது வெள்ளிக்கிழமை வரை விவாதம் நடைபெறும்.