சட்டப்பேரவை நான்கு நாட்கள் தான் நடக்கும் – அப்பாவு அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர், வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர், நாளை தொடங்க உள்ளது. கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து, சபாநாயகர் அப்பாவு தலைமையில், இன்று அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், சட்டப்பேரவை கூட்டத்தொடரை 4 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, செவ்வாய்க்கிழமை காலை பேரவை கூடியதும், வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, பேரவை நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்படும் எனக் கூறினார். புதன்கிழமை கூடுதல் செலவினங்களுக்கான அறிக்கை பேரவையில் வைக்கப்பட்டு அதன் மீது வெள்ளிக்கிழமை வரை விவாதம் நடைபெறும் என்றும் அப்பாவு தெரிவித்தார்.

Exit mobile version