வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் யாரும் தலையிடக்கூடாது – அமித் ஷா

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை என்பது தேர்தல் ஆணையத்தின் அரசியல் சட்ட கடமை என்றும், அதில் யாரும் தலையிடக்கூடாது என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் நடவடிக்கையாகவே சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படுவதாகக் கூறினார். ஊடுருவல்காரர்களை கண்டறிந்து, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதுடன், அவர்களை நாடு கடத்துவதற்கான பணிகளை மேற்கொண்டிருப்பதாகவும் அமித் ஷா குறிப்பிட்டார்.

எனவே, வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்தை தேர்தல் ஆணையம் தொடந்து மேற்கொள்ளும் என்றும், இந்திய குடிமக்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை பிரத்யேகமாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். எல்லைப்பகுதிகளில் ஊடுருவல்களை தடுக்க மத்திய அரசால் மட்டுமே முடியாது என்றும், மாநிலங்களின் ஒத்துழைப்பும் அவசியம் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.

Exit mobile version