ஷாவ்மி நிறுவனம் புதிதாக பவர் பேங்க் ஒன்றை இந்திய ஸ்மார்ட் போன் பயனாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. அதில், ஒரே நேரத்தில் மூன்று ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்யலாம்.
இதனால், குழுவாகப் பயணங்கள் மேற்கொள்பவர்களுக்கு இந்த பவர் பேங்க் பயனுள்ளதாக
இருக்கும் என ஷாவ்மி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. பவர் பேங்க் பயன்படுத்தும் பலரின் பொதுவான கோரிக்கையான, அதன் திறனை அதிகரிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டே இந்த புதிய பவர் பேங்கில் 20,000mAh திறன் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
அதோடுமட்டுமின்றி 22.5வாட்ஸ் வேகமாக சார்ஜ் செய்யும் திறனும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதனால், ஒரே நேரத்தில் மூன்று ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்தாலும், மேலும் சிலமுறை சார்ஜ் செய்துகொள்ளலாம் என்பது இதன் சிறப்பம்சமாகும்.
புதிய ஷாவ்மி பவர் பேங்க்-எவ்ளோ வேணாலும் சார்ஜ் போட்டுக்கலாம்
