ஒரு SORRY போதாது CM ஸ்டாலின் சார்-அதிரவிட்ட விஜய்

காவல் நிலையத்தில் விசாரணையின்போது உயிரிழந்த 24 பேரின் குடும்பத்தினரிடமும், முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த மாதம் 27-ந்தேதி சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில், போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அஜித்குமார், போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 4 ஆண்டுகளில் அஜித்குமார் உள்ளிட்ட 24 பேர், காவல் நிலைய விசாரணையின்போது, துன்புறுத்தி கொலை செய்யப்பட்டிருப்பதாக, சமூக செயற்பாட்டாளர்கள் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.

இந்நிலையில், காவல் நிலைய விசாரணையின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, நீதி கேட்கும் வகையில், சென்னையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய விஜய், காவல் நிலையத்தில் விசாரணையின்போது, துன்புறுத்தி கொலை செய்யப்பட்ட 24 பேரின் குடும்பத்தினரிடமும், முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.

எப்படி கேள்வி கேட்டாலும் உங்களிடமிருந்து எந்த பதிலும் வராது. இந்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசு, தற்போது சாரி கேட்கும் அரசாக மாறிவிட்டது என்றும், விஜய் கடுமையாக சாடினார்.

Exit mobile version