ஒரே மாதத்தில் இரண்டரை கோடி பேரை இணைக்க வேண்டும் – ஸ்டாலின் அறிவுரை

தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. தேர்தலை எதிர்கொள்ள ஆளுங்கட்சியான தி.மு.க. முன்கூட்டியே தயாராகி வருகிறது. இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.

அப்போது, உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், மத்தியில் ஆட்சியில் இருக்கும் பிஜேபி அரசு மற்றும் அதன் கூட்டணியாக இருக்கும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள், தமிழ்நாட்டிற்கு இழைத்துள்ள மற்றும் இழைக்க உள்ள அநீதியை, ஒவ்வொரு குடும்பத்தினரிடமும், எடுத்து சொல்ல வேண்டும் என வலியுறுத்தினார்.

இன்னும் 30 நாட்களில், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் சேர்த்து, இரண்டரை கோடி பேரை, திமுகவின் புதிய உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்.

இதுவரை இணைக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் விவரங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்படுகிறது. எந்த வாக்குச்சாவடியிலாவது, நாம் வழங்கிய நடைமுறையை சரியாக கடைபிடிக்கவில்லையெனில், அங்கு மீண்டும் முதலில் இருந்து தொடங்குவோம் என்றும், முதல்வர் கூறினார்.

Exit mobile version