பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தமிழகத்திற்கு அடிக்கடி வருவது திமுகவுக்கு நல்லது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2024-25 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில், பதக்கம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் விழா சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், மாணவர்கள் படிப்புடன் சேர்ந்து விளையாட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பின்னர், பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த உதயநிதி, பிரதமரும், உள்துறை அமைச்சரும் அடிக்கடி தமிழகம் வர வேண்டும். அது திமுகவிற்கு நல்லது என்று கூறினார்.