பற்றி எரிகிறது சரக்கு ரயில் – அணைக்கும் பணி தீவிரம்

திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. அப்போது, ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிவதால், அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் இருந்து டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில், இன்று அதிகாலை திருவள்ளூர் ரயில் நிலையத்தை கடக்கும்போது, தண்டவாளத்தை விட்டு விலகியது. அப்போது, ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் கவிழ்ந்ததால், உடனடியாக தீப்பிடித்துக் கொண்டன. 7 பெட்டிகள் பற்றி எரிவதால், அந்த பகுதி முழுவதும் கரும்புகை மூட்டமாக காணப்படுகிறது.
இதன் காரணமாக இந்த வழித்தடத்தில் செல்லும், அனைத்து ரயில் சேவைகளும் தடைபட்டுள்ளது. சென்னையில் இருந்து மைசூர் புறப்பட வேண்டிய வந்தே பாரத், மைசூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் மற்றும் கோவை அதிவிரைவு வண்டி ஆகியன, சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
கிட்டத்தட்ட 4 மணிநேரத்திற்கும் மேலாக தீ எரிவதால், அந்த பகுதி முழுவதும் கரும்புகை மூட்டமாக காணப்படுகிறது. தீயை அணைக்கும் பணிகளை, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதீப், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.

Exit mobile version