பெரிய தொழில், வணிக நிறுவனங்களுக்கு 3 புள்ளி 16 சதவீத மின்கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. வீடுகளுகு 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் உள்ளிட்ட சலுகைகள் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அனைத்து வீட்டு நுகர்வோருக்கும் 100 யூனிட் வரையும், குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இல்வச மின்சாரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயம், கைத்தறி, விசைத்தறி, வழிபாட்டுத் தலங்கள், தாழ்வழுத்தத் தொழிற்சாலை ஆகியவற்றுக்கு மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும். என்றும் கூறப்பட்டுள்ளது
இரு மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்தும் சிறுவணிகர்கள். 50 கிலோவாட் வரை கொண்ட தாழ்வழுத்த தொழிற்சாலைகள், குடிசை மற்றும் குறுந்தொழில்களுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை தமிழக அரசே ஏற்று மானியமாக வழங்கும்.
விசைத்தறியாளர்களுக்கு ஆயிரம் யூனிட் வரை இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். ஆயிரத்து ஒரு யூனிட்டுக்கு மேல் உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை தமிழக அரசு மானியமாக வழங்கும். பெரிய தொழில், வணிக நிறுவனங்களுக்கு 3 புள்ளி 16 சதவீத மின்கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.