பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவு-நடிகர்,நடிகைகள் நேரில் அஞ்சலி

அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட, பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, பெங்களுருவில் காலமானார். அவருக்கு வயது 87,
திருமணத்திற்குப் பின்னர், பெங்களுருவிலேயே சரோஜா தேவி குடியேறினார். வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக, இன்று உயிர் பிரிந்தது.
பெங்களூருவில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள சரோஜா தேவி உடலுக்கு, முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சரோஜா தேவி மறைவுக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா, தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த், பாமக தலைவர் அன்புமணி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரமேலதா விஜயகாந்த் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version