ஜூலை 7-ல் கூடுதல் டோக்கன்கள்-தமிழக பத்திரப்பதிவு துறை சொன்ன இனிப்பு செய்தி

வரும் ஜூலை 7-ம் தேதி சுப முகூர்த்த தினம் என்பதால் அன்று பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன்களை
வழங்க இருப்பதாக தமிழக பதிவுத்துறை அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.

தாங்கள் வாங்கும் வீட்டுமனை உள்ளிட்ட பிற பத்திர பதிவுகளை நல்ல முகூர்த்த தினத்தில் பதிவு செய்தால் செல்வம் கொழிக்கும் என்பது பலரது நம்பிக்கையாக உள்ளது, அந்தவகையில், “ஆனி மாதத்தில் வரும் சுப முகூர்த்த தினமான ஜூலை 7-ம் தேதி அதிக அளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால், கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி, ஜூலை 7-ம் தேதி ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100 டோக்கன்களுக்கு பதில் 150 டோக்கன்கள் வழங்கப்படும் என்றும், இரண்டு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 200டோக்கன்களுக்கு பதில் 300 டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகளவில் பத்திரப் பதிவு நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 சாதாரண முன்பதிவு டோக்கன்கள் மற்றும் ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் டோக்கன்களும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வழங்கப்படும்” என்றும் அரசு வெளியிட்டுள்ள அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version