எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் – ராகுல் காந்தி!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது 5 ஜெட்விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருப்பது குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உண்மையை தெரிவிக்க வேண்டும் என்று மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதலின்போது 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், தனது தலையீட்டால் போர்நிறுத்தப்பட்டது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளிக்கிழமை மீண்டும் கூறியிருந்தார்.

டிரம்ப் பேசிய வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ள ராகுல் காந்தி, 5 ஜெட் விமானங்கள் குறித்த உண்மை என்ன மோடிஜி? இதனை அறிந்து கொள்ள வேண்டிய உரிமை நாட்டிற்கு உள்ளது என்றும் பதிவிட்டுள்ளார்.

அதிபர் டிரம்ப் பேசும்போது, 5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று மட்டுமே குறிப்பிட்டிருந்தார். அவை எந்த நாட்டின் ஜெட் விமானங்கள் என்பது குறித்து அவர் எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version