ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் பிரேமலதா சுற்றுப்பயணம்

xr:d:DAF3lm9cQ48:1366,j:5745888661551111036,t:24031211

2026 சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் 3 ஆம் தேதி முதல் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இதையொட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஏற்கனவே தனது சுற்றுப்பயணத்தை தொடங்கி விட்டார். பாமக தலைவர் அன்புமணி, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஆகியோரும் விரைவில் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

இந்நிலையில், பிரேமலதா விஜயகாந்த்தின் உள்ளம் தேடி-இல்லம் நாடி என்ற தலைப்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக பிரேமலதா விஜயகாந்த் முதல் கட்ட சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். ஆகஸ்ட் 3 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியில் இருந்து தனது பயணத்தை தொடங்கும் பிரேமலதா, 23 ஆம் தேதி செங்கல்பட்டு தொகுதியில் நிறைவு செய்கிறார்.

Exit mobile version