வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில், இளைஞர்களின் பங்கு முக்கியமானது என, பிரதமர் நரேந்திரமோடி கூறி இருக்கிறார்.
மத்திய அரசின் ரயில்வே, வங்கி, அஞ்சலகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு, ரோஜ்கர் மேளா என்னும் நிகழ்ச்சி மூலம், பிரதமர் நரேந்திர மோடி, பணி நியமன உத்தரவுகளை வழங்கி வருகிறார்.
அந்த வகையில், நாடு முழுவதும் இன்று 47 இடங்களில், வேலைவாய்ப்பு திருவிழா நடைபெற்றது. டெல்லியில் இருந்தபடி, காணொலி வாயிலாக, 51 ஆயிரம் பேருக்கு பிரதமர் மோடி பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு பகுதியாக ரோஜ்கர் மேளா திட்டம் உள்ளது.
இந்த தேசத்தை கட்டியெழுப்ப, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இளைஞர்களின் திறமை தான், இந்திய நாட்டின் மிகப்பெரிய மூலதனம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில், இளைஞர்கள் பங்கு முக்கியமானதாக இருக்கிறது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
51,000 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி
