96-ஆவது அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டி நாளை முதல் வரும் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் மற்றும் முருகப்பா குழுமம் இணைந்து இப்போட்டிகளை நடத்துகின்றன. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் தலைவர் விவேக் குமார் ரெட்டி, முருகப்பா நிறுவனத்தின் செயல் தலைவர் அருண் முருகப்பா ஆகியோர் இந்த ஆண்டு போட்டியில் முதன் முறையாக சர்வதேச அணியான மலேஷிய அணி பங்கேற்க இருப்பதாக தெரிவித்தனர். இந்தப் போட்டியில் இரண்டு குழுக்களாக 10 அணிகள் மோதுகின்றன. வெல்லும் அணிக்கு 7 இலட்சம் ரூபாயும், இரண்டாமிடம் பிடிக்கும் அணிக்கு 5 இலட்சம் ருபாயும் பரிசு வழங்கப்படுகிறது. அரையிறுதிப் போட்டிக்கு ஒவ்வொரு அணிக்கும் 50 ஆயிரம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படுவதாகவும் கூறினர்.