அரசுமுறைப் பயணமாக இங்கிலாந்து சென்ற பிரதமர் மோடிக்கு லண்டன் விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
4 நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு சென்றுள்ளார்,முதல் கட்டமாக இங்கிலாந்து சென்ற மோடிக்கு லண்டன் விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் விமான நிலையம் வெளியே ஏராளமான இந்தியர்கள் கூடி நின்று மோடியை வரவேற்றனர், அவர்களுடன் கைகுலுக்கி மோடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அந்நாட்டுப் பிரதமர் ஸ்டார்மர்-ஐ மோடி சந்தித்துப் இரு நாட்டு உறவுகள் குறித்து பேச உள்ளார்.அப்போது இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.மன்னர் 3-ம் சார்லைசையும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.