4-வது டெஸ்டில் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு

இங்கிலாந்துக்கு அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியில் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்நிலையில் காயம் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து நிதிஷ்குமாரும், 4-வது போட்டியில் இருந்து அர்ஷ்தீப் சிங்கும் விலகியதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய வீரர்கள் அடுத்தடுத்து காயத்தால் அவதியுறும் நிலையில் 4-வது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் களம் இறங்குவார் என தகவல் வெளியாகி உள்ளது.

Exit mobile version