இன்ஜினியர்களுக்கு டிமாண்ட் வரும்-அடித்துச்சொல்லும் IIT காமகோடி

அடுத்த ஐந்து ஆண்டுகளில் மெக்கானிக்கல்,சிவில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு டிமாண்ட் அதிகமாக இருக்கும் என ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஐஐடி உருவாக்கிய எடை குறைவான சக்கர நாற்காலியை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நடைபெற்று.சக்கர நாற்காலியை மாற்றுத்திறனாளிகளின் உடல் வாகுக்கு ஏற்றவாறும், கையாள்வதற்கு எளிமையாகவும், உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை அறிமுகம் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஐஐடி இயக்குனர் காமகோடி சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் போன்ற துறைகளில் திறன்மிக்க நபர்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
ஏஐ பாடத்தை மட்டுமே தெரிந்து கொண்டு உலகத்தை இயக்கி விட முடியாது என்றும் காமகோடி தெரிவித்தார்.

Exit mobile version