சட்ட நடைமுறைகள் சீர்கெட்டுள்ளது-BR கவாய் கவலை

இந்திய சட்ட நடைமுறைகள் சரி செய்ய வேண்டிய அளவிற்கு சீர்கெட்டு இருப்பதாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத் நகரிலுள்ள நள்சார் சட்ட பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசிய அவர், வழக்கு விசாரணைகளில் காலதாமதங்கள் என்பது கவலையளிப்பதாகவும், நம்முடைய நாடும், சட்ட முறைகளும் தனித்துவ சவால்களை எதிர்கொண்டுள்ளன என்றும் கூறினார்.

விசாரணை கைதிகளாகவே பல ஆண்டுகள் சிறையில் கழித்த நபர், பின்னர் நிரபராதி என தெரியவரும் பல வழக்குகளை பார்த்திருப்பதாகவும், சரி செய்ய வேண்டிய அளவிற்கு சில சட்ட நடைமுறைகள் சீர்கெட்டிருப்பதாகவும், தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கவலை தெரிவித்தார்.

Exit mobile version