நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வேளாங்கண்ணி மாதா கோவிலில் வழிபாடு நடத்தினார்.
“மக்களை காப்போம்-தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்தை முன்வைத்து சட்டமன்ற தொகுதி வாரியாக, எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில், பொதுமக்களையும், விவசாயிகளையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
இன்று காலை வேளாங்கண்ணிக்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமி, அங்குள்ள மாதா கோவிலில், சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார். அப்போது, நாகை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஒ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
















